பெண்கள் T-20 உலகக்கிண்ணம்: அவுஸ்ரேலியவுடன் போராடி தோற்றது இலங்கை அணி

இலங்கை அணியுடனான சர்வதேச மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்று வரும் சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் பேர்த்தில் இடம்பெற்ற 5 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவி சாமரி அத்தபத்து 50 ஓட்டங்களையும், உமேஷா தமாஷினி 20 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்ஜிவனி 25 ஓட்டங்களையும், அதிகபடியாக பெற, ஏனைய வீராங்கனைகள் அனைவரும் குறைவான ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

இதனை அடுத்து 123 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.

அவுஸ்ரேலிய அணி சார்பில் ரேச்சல் ஹெய்ன்ஸ் 60 ஓட்டங்களயைும், மெக் லென்னிங் 41 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்‍கை அணி சார்பில் உதேஷிகா பிரபோதானி, சசிகல சிறிவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், சாமரி அத்தபத்து ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணியானது தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: