கோட்டா அரசு தேர்தல் நாடகத்தை முன்னெடுத்து வருகின்றது - சி.வி.கே. குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 கீழ்1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை அரசு விலகினாலும் அது வலுவாகவே இருக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தாம் தேசியத்தை காப்பாற்றுகின்றோம் என தென்னிலங்கை மக்களுக்கு படம் காட்டுவதற்காகவே கோட்டாபய அரசு தேர்தல் நாடகத்தை முன்னெடுத்துவருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 43 கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை அரசு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பாரிய பாதிப்புக்கள் எதனையும் ஏற்படுத்தாது என்றும் ஏனெனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல உறுப்பு நாடுகளின் அனுசரணையுடனேயே நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும் அந்தத் தீர்மானம் தொடர்ச்சியாகவே இருந்துகொண்டே இருக்கும் என்றும் அரசு விலகுவதால் பாதிப்பு மிகக் குறைவு என்றே தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: