மன்னார் திருக்கேதிஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தளமான மன்னார் திருக்கேதிஸ்வர ஆலயத்தில்  மஹா சிவராத்திரி நிகழ்வானது நேற்று இரவு சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல ஆயிரக்கனக்காண பக்தர்களுடன் 
குறிப்பாக யாழ்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ,கிளிநொச்சி பகுதிகளில் இருந்தும், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்திருந்தனர்.

அதேவேளை சிங்கள பகுதிகளில் இருந்தும் அநேக பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தனர்.

நேற்று காலை தொடக்கம் பல்வேறு பட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம் பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகள் மதம் சார் நிகழ்வுகள் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் இரவு பூசையும் இடம் பெற்றது.

மஹா சிவராத்திரி நிகழ்வுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மற்கொள்ளப்பட்டிருந்ததோடு,  நிகழ்வு இடம்பெறும் பிரதேசம் முழுவதும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: