போர்த்துக்கல் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது கருணைக் கொலை சட்டமூலம்

கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

போர்த்துக்கலில் ஆளும் சோசலிசக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகளினால் முன்மொழியப்பட்ட கருணைக்கொலை சட்டமூலம் பாராளுமன்றில் 3 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

230 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 127 உறுப்பினர்களும் 124 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக நிராகரிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் நிலுவையிலிருந்த நிலையில் தற்போது அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருணைக் கொலைக்கு சுவிட்சர்லாந்து , நெதர்லாந்து , லக்ஸம்பேர்க் மற்றும் பெல்ஜியத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments