ஐக்கிய நாடுகள் சபையின் நேரடித் தலையீட்டை வலியுறுத்தி போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நேரடித் தலையீட்டையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் மன்னார் சதோச மனித புதைகுழிக்கு அருகில் சென்று  நிறைவடைந்தது. 

குறித்த போராட்டத்தின் போது சதோச புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட  மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், 

நீதியான விசாரணை நடாத்தக் கோரியும், சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டையும் வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் தலைமையில் குறித்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: