ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, காத்தான்குடியை சேர்ந்த இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் பயிற்சி பெற்றமை மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 64 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று பிணை வழங்கப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments