"சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளமை தேசத் துரோக கருத்தாகும்"

நிரூபிக்கப்படாத யுத்தக் குற்றங்களைக் காரணங்காட்டி இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட பயணத்தடையை வரவேற்பதாக சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளமை தேசத் துரோக கருத்தாகும் என ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்கினேஷ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அத்தோடு நாடாளுமன்றத்தினதும் அமைச்சரவையினதும் அனுமதி இன்றி நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையிலிருந்து விலகுவது தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான நடவடிக்கைகளும் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

அத்தோடு தனிநபர் ஒருவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

No comments: