ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிவகார்திகேயன் படங்கள்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு  உள்ளது. தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு வெளியான பட்டாஸ் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு தெலுங்கில் ‘லோக்கல் பாய்’ (local boy)என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 28ஆம் திகதி வெளியாகின்றது.

இதேபோல சிவகார்த்திகேயனின் ஹீரோ (hero) படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். இந்த படத்துக்கு தெலுங்கில் சக்தி என்று பெயர் வைத்துள்ளனர். இப்படமும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: