இரு பேருந்துகள் மோதி விபத்து : சிறுவன் உயிரிழப்பு, 20 பேர் காயம்

தம்புள்ளை மற்றும் மாத்தளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்திட் வீதியின் நா உல நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் மற்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றறுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் நாலந்தா மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments: