"இனப்பிரச்சினை தீரும் வரை உலக நாடுகளின் தலையீடு கட்டாயம் "

இனப்பிரச்சினை தீரும் வரை உலக நாடுகளின் தலையீடு கட்டாயம் வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 47 நாடுகளினாலும் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை முற்றாக எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் அரசாங்கத்தின் இந்த விலகல் அறிவிப்பால் தமிழ் மக்களுக்கு நன்மையும் உண்டு என்றும் இந்த முடிவால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப்போகின்றன. அரசாங்கம் சர்வதேசத்தை வலிந்து அழைத்துக்கொள்ளப்போகின்றது என்றும் குறிப்பிட்டார்.

No comments: