UPDATE : சிறு குழந்தை உட்பட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஐ தொட்டது - சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு


UPDATE :  கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க சற்றுமுன்னர் அறிவித்தார்.

இன்றுமட்டும் புதிதாக 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 243 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தை மற்றும் 23 வயதுடைய ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை அறிவித்தார்.

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பி 11 ஆவதாக பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கும் மகளும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர்களுமே புதிதாக அடையாளம் காண[பட்டுள்ளனர் 

Post a Comment

0 Comments