நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கப்போவதில்லை - முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார நடவடிக்கைகளிற்கு பொறுப்பான செயற்படவுள்ளமையினால் தேர்தலில் போட்டியிடுவதில்லையென அவர் முடிவு செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு நாடளாவிய ரீதியில் பிரச்சாரத்தை கையாளும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், கூட்டணியின் ஊடக தொடர்பாளர் மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு பொறுப்பானவராகவும் அவரே செயற்படுவார்.

நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடா விட்டாலும், அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: