60 இலங்கையர்கள் 2 வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 14 வைத்தியசாலைகளில்

(CBC TAMIL - COLOMBO) - கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  நேற்றைய நிலவரப்படி 60 இலங்கையர்களும் இரண்டு வெளிநாட்டினரும் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக அரசு தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் 19 இலங்கையர்கள் உட்பட ஒரு வெளிநாட்டவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரியில் உள்ள போதனா வைத்தியசாலைகள் மற்றும் பதுளை பொது வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒரு இலங்கையர்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அனுராதபுரத்தில் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும் றிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் தலா இரண்டு பேரும் றாகம, கம்பாஹா மற்றும் நீர்கொழும்பில் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள போதனா வைத்தியசாலைகளில் தலா ஐந்து பேரும் கராபிட்டி வைத்தியசாலையில் ஆறு பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதேவேளை குருநாகல் மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகள் மற்றும் கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனை ஆகியவற்றில் தலா ஏழு பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: