கொரோனா எதிரொலி - அனைத்து சர்வதேச விமானப் பயணங்களையும் இரத்து செய்தது சவுதி

(CBC TAMIL - RIYADH) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவுதி அரேபியா அனைத்து சர்வதேச விமானப் பயணங்களையும் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவுதி அரேபியாவில் புதிதாக 24 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் இதுவரை மொத்மாக 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு சர்வதேச விமானப் பயணங்களை இரத்து செய்துள்ளதாகவும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

No comments: