கொரோனா அச்சுறுத்தல் - ஸ்பெயின் செல்லுமா வலிமை படக்குழு ?

வலிமை படக்குழு படப்பிடிப்புக்காக விரைவில் ஸ்பெயின் நாட்டுக்குச் செல்ல தயாராகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருவதால், ஸ்பெயினுக்கு உடனே செல்வது குறித்து படக்குழுவினர் யோசித்து வருகின்றனர்.

(சிபிசி தமிழ் - CBC TAMIL) நடிகர் அஜித் நடிப்பிலும், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் புதிய படம் வலிமை. இந்தப் படத்தை தயாரிப்பாளர் போனிக் கபூர் தயாரிக்கிறார். சென்னை மற்றும் ஐதராபாத்தில் தொடர்ச்சியாக படபிடிப்பு நடந்தது. ஒரு வார கால ஓய்வுக்குப் பின், நடிகர் அஜித் தொடர்ந்து வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்காக, ராஜஸ்தான் வறண்ட பகுதிகளில் இயக்குநர் வினோத் சில காட்சிகளை படமாக்கினார். அதைப்போல, ராஜஸ்தான் அல்லது மொராக்கா, ஸ்பெயின் நாடுகளில் படபிடிப்பு நடத்த வேண்டும் என நினைக்கிறார். இதற்காக, நடிகர் அஜித் தலைமையில் வலிமை படக் குழு விரைவில் ஸ்பெயின் நாட்டுக்குச் செல்ல தயாராகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருவதால், ஸ்பெயினுக்கு உடனே செல்வது குறித்து படக் குழுவினர் யோசித்து வருகின்றனர். நடிகர் அஜித் ஓ.கே., என்றால், படக் குழு ஸ்பெயின் செல்லுமாம்.

No comments: