ரவி உட்பட 4 பேரையும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(CBC TAMIL - COLOMBO) - ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் எலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று (13) பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு ஆஜராகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகாத சந்தேகநபர்கள் தொடர்பாக தற்போது வௌியிடப்பட்டுள்ள பிடியாணைக்கு அமைய நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு அவகாசம் அளிக்கப்படுவதாக குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று மீண்டும் ஆராயப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிபதிகளான நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனு தொடர்பிலான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments: