மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படும் - உயர்மட்ட தகவல்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை அதாவது இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படும் என உயர்மட்ட தகவல்களை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் தீவிரமாக அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தநிலையில் தொடர்ந்தும் எதிர்வரும் 06ஆம் திகதிவரை  ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதற்கு அரச உயர்மட்டம் முடிவு செய்திருப்பதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழ் சிங்கள மற்றும் புத்தாண்டு காலப்பகுதி என்பதால் எதிர்காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆரயப்படுவதாக அறிய முடிகின்றது.

Post a Comment

0 Comments