வௌிநாட்டவர்களை பதியும் நடவடிக்கை யாழில் ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஜரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் இன்று முதல் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜரோப்பா, வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் அருகில் உள்ள இராணுவ முகாம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் நேற்று அறிவுறுத்தியது. 

இதனையடுத்து, இந்த நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பதிவு மேற்கொண்ட வெளிநாட்டு பிரஜைகளை பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கையில் இதுவரை 34 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 204 ற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: