கொரோனா வைரஸ் : பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளதுடன் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 8227 ஐ எட்டியுள்ளது. 

அதேவேளை 150 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களில் இங்கிலாந்து 386, ஸ்கொட்லாந்து 22 வேல்ஸ் 22, வட அயர்லாந்து 7 எனப் பதிவாகியுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் லண்டனில் கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

லண்டனில் அத்தியாவசியமற்ற பயணங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கு இடையில் இடைவெளியைப் பேணுவற்காக மக்களைப் பொது இடங்களுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்படம் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments