கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் - முக்கிய அறிவிப்பு

புத்தளம் மற்றும் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுலாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய, வட-மத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கும், குருநாகல் மாவட்டத்திற்கும் இன்று மதியம் 2 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அதே பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுது.

இதேவேளை கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments