ஐபிஎல் போட்டியில் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை..!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்திய அரசு விசா வழங்க கட்டுப்பாடு விதித்துள்ள காரணத்தால் ஐபிஎல் போட்டியில் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா விசாவுக்கு மத்திய அரசு ஏப்ரல் 15-ஆம் திகதி வரை தடைவிதித்துள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல மாநிலங்கள் போட்டியை நடத்த தயங்கும் நிலையில் இந்த முடிவு ஐபிஎல் போட்டியை நடத்த மேலும் தடையாக இருக்கும். இதனால் ஐபிஎல் தொடர் நடைபெறுவது சந்தேகம்தான். 

இதற்கிடையே பிசிசிஐ அதிகாரி ஒருவர் இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். அதன்பின் மத்திய அரசு தடை குறித்து விளக்கமாக தெரிந்துகொண்டு பதில் வழங்கப்படும் என்றார். 

No comments: