மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு தொடரும்..... பிற பகுதிகளுக்கான அறிவிப்பு இதோ
கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மாகாணம் மற்றும் புத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை (27) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும்.
16 மாவட்டங்களில் (கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் வடக்கு மாகாணம் தவிர) நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (26), காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அதே நாளில் மதியம் 12 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும்.