கொரோனா தொடர்பாக வதந்தியை பரப்பியவருக்கு நேர்ந்த கதி...!

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குறித்த நபரை எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த நபர் தனது முகநூல் கணக்கில் COVID-19 தொடர்பான தவறான தகவல்களை பரப்பியுள்ளார் என பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குறித்த விசாரணையைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments