அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையோருக்கு 3 நாட்கள் விடுமுறை - அரசாங்கம்

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச சேவை நிறுவனங்களுக்கும் 3 நாட்கள் (17 முதல் 20) விசேட விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தயவுசெய்து வீட்டிலேயே தங்கி இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

No comments: