35 ஆண்டுகால சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார் பூஜித்

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, 35 ஆண்டுகாலத்திற்கு பின்னர் இன்று (14) சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக ஜெயசுந்தர கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரது பதவிக்கு நியமனம் பெறுவதற்கு மூன்று மூத்த பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்தில் உயர்மட்ட பதவியில் உள்ளனர் என்று பொலிஸ் தலைமையகத்தின் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

அதாவது பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மத்திய மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி. ரோஷன் பெர்னாண்டோ மற்றும் மேற்கு மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி ஜகத் அபேசிரி குணவர்தன ஆகியோறில் ஒருவர் நியமிக்கப்படலாம் என அறிய முடிகின்றது.

No comments: