கண்காணிப்பு நிலையங்களில் இருந்த இரண்டாவது குழுவினரும் வௌியேற்றம் - இராணுவம்

கோப்பு படம்
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியதை அடுத்து தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டாவது குழுவினரும் இன்று (25) அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு – புனானை மற்றும் கந்தக்காடு நிலையத்தில் இருந்த 201 பேரே இவ்வாறு கண்காணிப்பின் பின்னர் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று புனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 203 பேரும், கந்தக்காடு நிலையத்திலிருந்து 108 பேரும் என 311 பேர் கண்காணிப்பின் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments