கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையை சேர்ந்த மருத்துவர் பிரித்தானியாவில் உயிரிழப்பு

கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்பவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் சிகிச்சை  பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வாரகாலமாக சிகிச்சை பெற்றுவந்த பெல்தம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவந்த யாழ். புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஒருவர் உயிரிழந்தார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களில் சனிக்கிழமையன்று இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளில் மேலும் 260 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது வெள்ளிக்கிழமை 759 ஆக இருந்தது என்றும்  தற்போது 1,019 ஐ எட்டியுள்ளது என பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்  தெரிவிக்கின்றன.

இப்போது 17,089 பேர் கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments