கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - 88 ரயில் சேவைகளை இரத்து!

இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் 88 ரயில் சேவைகளை இரத்து செய்வதாக ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோன வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு ரயில் சேவைகளை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.

No comments: