கொரோனா அச்சுறுத்தல் - வவுனியா சிறையில் கைதிகள் போராட்டம்

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக தம்மை பிணையில் விடுவிக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகினை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இலங்கையையும் ஆக்கிரமித்துள்ள நிலையில்   இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், தற்போது நாட்டை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது, சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

No comments: