கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளது - அவுஸ்ரேலிய பிரதமர்

அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலின் வீதம் சமீபத்திய நாட்களில் குறைந்துள்ளதாகவும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியே அதற்கு காரணம் என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இன்று (29) டெலிமெடிசின் பராமரிப்பு மற்றும் பிற சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதற்காக மேலதிகமாக 1.1 பில்லியன்டொலரை அறிவித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

சமீபத்திய நாட்களில் தினசரி தொற்றுநோயாளிகளின் அதிகரிப்பு சுமார் 13% -15% என்றும் இது ஒரு வாரத்திற்கு முன்பு 25% -30% ஆக இருந்தது என ஸ்கொட் மொரிசன் கூறினார்.

சுகாதார அமைச்சின் சமீபத்திய அதிகாரபூர்வ தகவல்களின்படி, இன்று அதிகாலை அவுஸ்ரேலியாவில் 3,809 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது முந்தைய நாளை விட 431 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 14 உயிரிழப்புக்கள் அங்கு பதிவாகியுள்ளதுடன் மேலும் இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments