கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மூன்று கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி கண்டி அக்குரணை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றும் புத்தளம் மற்றும் கடையன் குளம் பகுதிகளில் உள்ள மக்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இப்பகுதிகளில் இனங்காணப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் புத்தளம் பகுதியில் கொரோனா தடுப்பு முகாம் ஒன்றை நிறுவி அப்பகுதியில் உள்ள 118 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
