அசாதாரண நிலையிலும் அரசாங்கத்தின் செலவுகளுக்கு போதுமான நிதி உள்ளது - திறைசேரி

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண நிலையிலும் அரசாங்கத்தின் செலவுகளுக்கு போதுமான நிதி கையிருப்பிலுள்ளதாக திறைசேரி தெரிவித்துள்ளது.

எனவே பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதியை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கூறியுள்ளார்.

அத்தியவசிய பொருட்களை மக்களுக்களின் வீடுகளுக்கு சென்று விநியோகிப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்றும் அரச ஊழியர் ஓய்வூதிய கொடுப்பனவு, ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments