கொரோனாவினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களில் 41 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம்!

இலங்கையில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் 41 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை நாட்டில் 106 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார மேம்பட்டு பணியகத்தின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்போது பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுள் 11 வயதிற்குட்பட்ட ஐந்து பேரும் 11 முதல் 20 வயதுக்குட்பட்ட 05 பேரும் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 36 பேரும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 5.1 விகிதமானவர்கள் 51 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 61 முதல் 70 வயதுக்குட்பட்ட ஏழு நபர்கள் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 71 வயதிற்கு மேற்பட்ட இரண்டு நபர்களும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும், இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் 68 விகிதமானவர்கள் ஆண்கள் என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பில் 25 பேரும் களுத்துறையில் 15 பேரும் கம்பாஹா மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒன்பது பேரும் அடங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து நான்காவது குழுவினரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி 503 பேர் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments