யாழில் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொற்று இல்லை...!

யாழ். தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 04 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிறுமிக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சிறுமியை தற்போது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளின் பின்னர் 33 பேர் வீடுதிரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments