சீனாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தன..!

சீனாவில் புதிதாக நேற்று (28) 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் இது முந்தைய நாளில் 54 ஆக இருந்தது என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 7 நாட்களில் 313 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் உள்நாட்டவர்கள் 6 பேரே பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதிவான தொற்றுக்களில் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்ததாகவும் இதனால் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் மேலும் வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளும் நேற்று முதல் அமுலாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை வுஹானில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் கொரோனா வைரஸ் உருவாகிய   ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் கடந்த 10 நாட்களில் ஒரே ஒருவரே கொரோனா வைரஸ் தொற்று நோயாளியை அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பகுதியில் மொத்தம் 3,300 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்துள்ளனர், 81,439 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: