ஜனாதிபதி கோட்டா பொதுமக்களுக்கு விடுத்த முக்கிய கோரிக்கை

விடுமுறை தினமான இன்று அனைத்து நாட்டவர்களை பாதுகாப்பாக வீட்டினுள்ளேயே இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் ட்வீட்டர் பதிவில் "இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம். கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோரையும் பாதுகாக்கவும்!" குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையில் இதுவரை 18 பேர் அடையாளங்கணப்பட்டுள்ள நிலையில் இன்று அரச தனியார் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: