இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

(CBC TAMIL/ COLOMBO) - இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என ஐ.டி.எச். வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் குறித்த ஆண் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்ட ஒருவர் இரண்டு தினங்களின் முன்னர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் அவர் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களின் முன் அவர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றிற்கு இலக்காகியிருக்கலாமென நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையரின் உறவினர்களை தனிமைப்படுத்த அரசு நடவடிக்கை

No comments: