யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி உறுதி செய்யப்பட்டார்
யாழில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 17 பேர் கொரோனா அச்சம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களில் 3 பேருக்கு தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் ஏனையோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் அரியாலை பிலதெனியா தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்ட  போதகரை அறை ஒன்றில் சந்தித்துப் பேசிய ஆண் ஒருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.Post a Comment

0 Comments