கொரோனா வைரஸ்: மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை

(CBC TAMIL - COLOMBO) - இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான செய்திகளால் ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முதல் கொரோனா தொற்றாளரின் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: