பாடசாலைகள் மூடப்படுகின்றதா? - கல்வி அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Minister of Education Dullas Alahapperuma says no decision has been made so far to close all schools in the country
(CBC TAMIL - COLOMBO) - கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூட இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளின் கல்வி சுற்றுப்பயணங்கள் மட்டுமே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த அறிவிப்பு தொடர்பாக அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments: