கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் புகை பிடித்தல்... மதுபான சாலைகளை மூடுமாறு ஜானாதிபதியிடம் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் புகைப்பிடித்தலே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, புகைபிடித்தல் வைரஸ் பரவுவதில் நேரடி தாக்கத்தை வதாகவும் சிகரெட் விற்பனை மிகவும் அவதானத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.

புகைக்கும் நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சதவீதம் மிகவும் அதிகம் என தெரிவித்த வைத்தியர் ஹரித அலுத்கே,  உயிரை நேசிப்பவர்களாயின் உடனடியாக புகைப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

எனவே புகைபிடிப்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுபான சாலைகளை மூட வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அச்சங்கம் கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, புகைபிடித்தல் கொரோனா வைரஸ் நோயின் தீவிரத்தை அதிகரிக்கிறது மற்றும் மதுபான சாலைகளை மூடுவதற்கான அவர்களின் வேண்டுகோள் பொது ஒழுக்கம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: