ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? ஞாயிறு அரசாங்கத்தின் அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6 மணிக்குப் பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பு 22 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று மாலை 6 மணியில் இருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொது மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் 1 மீற்றர் இடைவெளியில் நபர்கள் நடமாடுமாறு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையை அவசியம் கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை அனைத்து விதமான ரயில் சேவைகளும் இன்று (20) பிற்பகல் 3.30 முதல் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

உடனுக்குடன் நாட்டில் இடம்பெறும் செய்திகளை அறிந்துகொள்ள தொடர்ந்தும் எமது முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள்

தொடர்புடைய செய்திகள், மறக்காமல் படியுங்கள்

  1. பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் - அரசாங்கம்
  2. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஐ எட்டியது
  3. கொரோனாவினால் கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் அதிகமானோர் பாதிப்பு

No comments: