தேர்தல் ஒத்திவைப்பு.... எப்போது நடக்கும் என்பதை கொரோனாவே தீர்மானிக்கும் - மஹிந்த

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

தற்போது நடைபெறுவரும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை கொரோனா வைரஸே தீர்மானிக்கும் என கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று முற்றாக நீங்கியதாக உலக சுகாதார அமைப்பு உறுதியளித்தாலும் எம்மால் நடாத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்

சிலவேளைகளில் மே மாதம் இடம்பெறலாம் இல்லையெனில் ஜீன் அல்லது அதற்கு பின்னர் நடத்தப்படலாம் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

இந்த வைரஸை ஒழிக்க வேண்டும், வைரஸை ஒழிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தவும் அதற்கு ஆதரவு வழங்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

No comments: