கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஐ எட்டியது

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை மேலும் 06 ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள சந்தேகத்தில் 218 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அச்சம் காரணமாக இன்றுமாலை 06 மணியில் இருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 06 மணிவரை ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: