ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 11,019 பேர் கைது!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2,727 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து இன்று (03) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியினுள்ளே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: