கொரோனா திரைமறைவில் பாரிய குற்றமிழைத்தவருக்கு பிணை...!

இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் சிறைகளில் உள்ள சிறு குற்றம் புரிந்தவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் 2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிக் 27 ரக போர் விமாங்கள் நான்கினை கொள்வனவு செய்யும் போதும் அதே ரக விமாங்கள் 4 இனை மீள திருத்தும் போதும் இடம்பெற்ற மோசடிகள் குறித்து கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு விசாரணை, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, 25 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 500 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் இவ்வாறு செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.

No comments: