ஒரு நாளுக்குள் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர் சோதனைகள்

கொரோனா வைரஸிற்கான 1,400 பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று (திங்கட்கிழமை) மட்டும் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இது ஒரு நாளுக்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அதிக எண்ணிக்கையாகும் என்று அனில் ஜாசிங்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனா வைரஸிற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments: