கொரோனாவால் மூன்றாவதாக உயிரிழந்தவர் தொடர்பாக வெளியான தகவல் இதோ..!

கொரோனா வைரஸ் தொற்றால் மூன்றாவதாக நேற்று (01) உயிரிழந்த நபர் தொடர்பான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த நபர், உயர் குருதி அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள், நீரிழிவு நோய் ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு நேற்று வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

அத்துடன், உயிரிழந்தவர் மருதானை பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் (ஆண்) என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: