765 பேரின் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படும் - இராணுவ தளபதி

765 பேரின் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று வீடுதிரும்புவார்கள் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 1,630 பேர் மத்திய நிலையங்களில் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

மேலும் 3,727 பேர் தனிப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்றும் நாகலகன் வீதி பிரதேசம் தனிப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சுதுவெல்ல பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்கள் இந்தப் பிரதேசத்திற்கு வந்திருந்ததாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

No comments: