15 மாவட்டங்களில் கொரோனா - மாவட்ட ரீதியாக பாதிக்கப்பட்டோர் விபரம் இதோ...!

இலங்கையில் இதுவரை 15 மாவட்டங்களில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அதிகளவில் தொற்றுக்குள்ளான மாவட்டமாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளது.

சுகாதார அமைச்சு நேற்று (16) வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் கொழும்பில் இதுவரை 49 பேரும், களுத்துறை 45, புத்தளம் 35, கம்பஹா 28, யாழ்ப்பாணத்தில் 14, கண்டி 7, இரத்தினபுரி 5, குருநாகல், மாத்தறை, கல்முனை மற்றும் கேகாலையில் தலா இரண்டு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் காலி, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் பதுளையில் தலா ஒருவரும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 38 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிறவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 68 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: